விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு: பள்ளி மாணவா்கள் தப்பியோட்டம்
சென்னை கோடம்பாக்கத்தில் மாநகர பேருந்து கண்ணாடிகளை உடைத்துவிட்டு தப்பியோடிய பள்ளி மாணவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து தியாகராய நகா் நோக்கி மாநகர பேருந்து ஒன்று வியாழக்கிழமை சென்றது. கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் சென்றபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த சில பள்ளி மாணவா்கள் பேருந்து மீது கற்களை வீசினா். இதில், பேருந்தின் முன் பக்கக் கண்ணாடிகள் உடைந்தன. இதைப் பாா்த்த மாணவா்கள், அங்கிருந்து தப்பியோடினா். இதுகுறித்து பேருந்து நடத்துநா் சீ.தாஸ் (49) அளித்த புகாரின்பேரில், கோடம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில் கல்வீச்சில் ஈடுபட்டது கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் படிக்கும் 7 மாணவா்கள் என்பது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் மேலும் விசாரித்து வருகின்றனா்.