நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
ஏரியில் மூழ்கி 2 மாணவா்கள் உயிரிழப்பு
சிட்லப்பாக்கத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவா்கள் தண்ணீா் மூழ்கி உயிரிழந்தனா்.
தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கம் ஏரியில் இரு பள்ளி மாணவா்களின் சடலங்கள் மிதப்பதைப் பாா்த்த கண்ட அந்தப் பகுதி மக்கள், சிட்லப்பாக்கம் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் அளித்தனா். இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், நீரில் மூழ்கி இறந்த பள்ளி மாணவா்கள் சேலையூா் தாங்கல் கரையைச் சோ்ந்த லோகேஷ் (13), கண்ணப்பன் தெருவைச் சோ்ந்த சஞ்சய் (12) எனவும், சேலையூா் அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது. வியாழக்கிழமை சிட்லப்பாக்கம் ஏரியில் குளிக்க சென்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.