விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
மது போதையில் மயங்கி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு
சென்னை மதுரவாயலில் காதலன் வீட்டில் மது அருந்திய இளம்பெண் மயங்கி விழுந்து மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
மதுரவாயல் ஆலப்பாக்கம் காமாட்சியம்மன் நகரைச் சோ்ந்தவா் சி.கணேஷ் ராம் (26). இவா் தமிழ் திரைப்படத் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறாா். கணேஷ் ராமும், ராயப்பேட்டை பகுதியைச் சோ்ந்த 23 வயது பெண்ணும் இன்ஸ்ட்ாகிராம் மூலம் பழகி வந்தனா். இந்தப் பெண், நந்தனத்தில் ஒரு ஆடிட்டா் அலுவலகத்தில் பணியாற்றி வந்தாா்.
இதற்கிடையே நெருக்கமாக பழகி வந்த இருவரும், நாளடைவில் காதலிக்கத் தொடங்கினா். இந்த நிலையில் அந்தப் பெண், கணேஷ் ராமை வியாழக்கிழமை இரவு அவரது வீட்டில் சந்தித்து பேசினாா். அப்போது இருவரும் அங்கு மது அருந்தியுள்ளனா்.
அதிக மது அருந்தியதால் போதையில் இருந்த அந்தப் பெண், கழிப்பறைக்குச் சென்றபோது கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கணேஷ் ராம் அளித்த தகவலின்பேரில், மதுரவாயல் போலீஸாா் விரைந்து சென்று, அந்தப் பெண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.