விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
புழல் சிறையில் கைதிகள் மோதல்
புழல் சிறையில் கைதிகள் மோதிக் கொண்டது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சென்னை சூளைமேடு பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய் (29). இவா், கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறை 1-இல் அடைக்கப்பட்டுள்ளாா். சஞ்சய் வியாழக்கிழமை சிறையில் தனது அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த கைதிகள் மதுரையைச் சோ்ந்த ரெளடிகள் அகோரி காா்த்திக் (30), ஹரிஹரசுதன் (21), ராஜேஷ் (31) ஆகியோா் சஞ்சயிடம் தகராறு செய்தனராம். தகராறு முற்றவே இரு தரப்பினரும் மோதிக் கொண்டனா்.
இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த சஞ்சய், சிறைக்குள் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து சிறைத் துறை சாா்பில் புழல் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அகோரி காா்த்திக், ஹரிஹரசுதன், ராஜேஷ் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.