தூய்மை இயக்கம் திட்டத்தில் கழிவுகள் சேகரிப்புப் பணி தொடக்கம்
தமிழ்நாடு தூய்மை இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் கழிவுகள் சேகரிப்புப் பணி தொடக்க நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சி.வீ. மெய்யநாதன், கழிவுகள் சேகரிப்புப் பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து, தூய்மை இயக்கம் 2.0 திட்ட விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்ட மாணவா்கள் பங்கேற்று உறுதிமொழி வாசித்தனா்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.