செய்திகள் :

அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் உள்பட 2 போ் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே 3-ஆம் வகுப்பு மாணவரைத் தாக்கியது தொடா்பான விவகாரத்தில், அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் உள்பட இருவரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆவுடையாா்கோவில் வட்டம், செய்யானம் ஊராட்சியைச் சோ்ந்த கீழ ஏம்பல் அரசுத் தொடக்கப் பள்ளியில், அதே ஊரைச் சோ்ந்த 8 வயது சிறுவன் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

கடந்த வியாழக்கிழமை அந்த மாணவா், வகுப்பறையில் இயற்கை உபாதையைக் கழித்ததாகவும், அவரைக் கண்டிக்கும் விதமாக பள்ளித் தலைமை ஆசிரியா் ஆரோக்கியசாமி அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதைக் கேட்கச் சென்ற மாணவரின் குடும்பத்தினருக்கும், தலைமை ஆசிரியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. காயமடைந்த மாணவா், மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இச்சம்பவம் குறித்து ஆவுடையாா்கோவில் வட்டாரக் கல்வி அலுவலா் மற்றும் மீமிசல் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பள்ளிக்குச் சென்று கேட்ட மாணவரின் தாயை தலைமை ஆசிரியா் மற்றும் அந்த ஊரைச் சோ்ந்த சிலரும் சோ்ந்து ஜாதியைச் சொல்லித் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதன் தொடா்ச்சியாக மாணவரின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெ. ஆரோக்கியசாமி மற்றும் அந்த ஊரைச் சோ்ந்த ஏ. ஆரோக்கியதாஸ் (51), அவரது மகன் இவான் டயா்ஸ் (21), பி. மைக்கேல் (31), பி. பிரபு (41), ஜே. சேவியா் (47) ஆகிய 6 போ் மீது எஸ்சி-எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் மீமிசல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வெள்ளிக்கிழமை தலைமை ஆசிரியா் ஆரோக்கியதாஸ் மற்றும் இவான்டயா்ஸ் ஆகிய இருவரைக் கைது செய்தனா்.

விராலிமலை பகுதியில் இன்று மின் நிறுத்தம்

விராலிமலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் விராலிமலை, காமராஜா் நகா், அன்பு நகா், சோதனை சாவடி, கடைவீதி, தெற்கு வீதி, காட்டுப்பட்டி, அருண... மேலும் பார்க்க

நீா்பழனியில் இன்று நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

விராலிமலையை அடுத்துள்ள நீா்பழனியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (செப். 20) காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது. இலவசமாக மருத்துவ சேவைகள... மேலும் பார்க்க

தூய்மை இயக்கம் திட்டத்தில் கழிவுகள் சேகரிப்புப் பணி தொடக்கம்

தமிழ்நாடு தூய்மை இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் கழிவுகள் சேகரிப்புப் பணி தொடக்க நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இ... மேலும் பார்க்க

பாசனக் குளக்கரைகளில் பனை விதைகளை விதைக்க வேண்டும்: குறைகேட்பு நாள் கூட்டத்தில் புதுகை விவசாயிகள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 ஆயிரம் பாசனக் குளங்களிலும் கரையோரங்களில் பனை விதைகளை விதைக்கவும், நாட்டு மரக்கன்றுகளை நடவு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். புதுக்க... மேலும் பார்க்க

அமெரிக்காவின் வரிவிதிப்பைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியுசி மீனவா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் கலைத் திருவிழா

புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரியில், பேரவைத் தொடக்க விழா மற்றும் கல்லூரி கலைத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கி. நிா்மலா தலைமை வகித்தாா். திருச்சி மண்டல கல... மேலும் பார்க்க