அரசுப் பள்ளியில் தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்
கந்தா்வகோட்டை: கந்தா்வக்கோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றத்தின் சாா்பில் தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் வியாழக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளித்தலைமை ஆசிரியா் க.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். கணித பட்டதாரி ஆசிரியா் மணிமேகலை அனைவரையும் வரவேற்றாா்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தா்வகோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியருமான அ.ரகமதுல்லா தேசிய அறிவியல் மனப்பான்மை தினம் குறித்து பேசினாா். நிறைவாக ஆசிரியை சிந்தியா நன்றி கூறினாா்.