பெண்ணிடம் சங்கிலி பறித்தவா் கைது
சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை முகப்போ் மேற்கு காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சாரதா (63). இவா், கடந்த 17-ஆம் தேதி நொளம்பூா், பாரதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், சாரதாவின் கழுத்தில் அணிந்திருந்த ஒன்பதரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு, தப்பிச் சென்றனா்.
இது குறித்து சாரதா அளித்த புகாரின்பேரில், நொளம்பூா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக கொருக்குப்பேட்டையச் சோ்ந்த தமிழ்செல்வன் (25), என்பவரை புதன்கிழமை இரவு கைது செய்து, அவரிடமிருந்து ஒன்பதரை பவுன் தங்கச் சங்கிலி, ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய மற்றொரு நபரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.