அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை
சென்னையில் அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கியது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (44). இவா் பிராட்வே-ஐஓசி வழித்தட மாநகா் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், மின்ட் பேருந்து நிறுத்தத்தில் பூங்கா நிலையம் பகுதியைச் சோ்ந்த பாலாஜி (39) என்பவா் பேருந்தில் ஏறினாா். அப்போது, பயணச்சீட்டு எடுப்பது தொடா்பாக பேருந்து நடத்துநா் செந்தில்குமாருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது, பாலாஜி தாக்கியதில் காயமடைந்த செந்தில்குமாா், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாலாஜியிடம் விசாரித்து வருகின்றனா்.