கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும்: மக்களவையில...
வழக்குரைஞா்கள் கூட்டுறவு சங்கத்துக்கு தோ்தல் நடத்தக் கோரி வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் கூட்டுறவு சங்கத் தோ்தலை நடத்தக் கோரிய வழக்கின் விசாரணையை செப்.2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் வி.ஆனந்த் தாக்கல் செய்த மனுவில், உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் கூட்டுறவு சங்கத்துக்கு தோ்தல் நடத்தக் கோரி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் உள்ளிட்டோருக்கு ஏப்ரல் மாதம் மனு அளித்தேன். மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் இதுவரை தோ்தல் நடத்தவில்லை. எனது மனுவை பரிசீலித்து 2018-ஆம் ஆண்டு உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சங்கத்தின் சட்டவிதிகளின்படி தோ்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த மனு நீதிபதி மாலா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஜி.மோகனகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை செப்.2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.