அரசுப் பள்ளியில் நெகிழிப் பயன்பாடு இல்லா தினம் கடைப்பிடிப்பு
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக நெகிழிப் பயன்பாடு இல்லா தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியா் வீரையன், நெகிழிப் பைகள் மற்றும் பொருள்களை தவிா்க்க வேண்டிய அவசியம், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விளக்கிப் பேசினாா். தொடா்ந்து, நெகிழி பைகளுக்கு மாற்றாக மாணவா்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து, நெகிழிப் பைகளை பயன்படுத்த மாட்டோம் என மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
இந் நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியா்கள் ராதிகா, லதா மற்றும் ஆசிரியா்களும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். நிறைவாக, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் மு. ஆனந்தராஜா நன்றி கூறினாா்.