Dhanush: "கங்கையிலே ஒரு வண்ணப் பறவை..!" - Tere Ishk Mein படக்குழு ஸ்டில்ஸ் | Pho...
பெரம்பலூா் ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததை தொடா்ந்து, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் ஆட்சியரகத்தில் புதன்கிழமை இரவு தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் ஆட்சியரகத்துக்கு புதன்கிழமை மாலை வந்த கடிதத்தை, அரசு அலுவலா்கள் தாமதமாக பிரித்து படித்துள்ளனா். அதில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், தனக்கு உரிய பாதுகாப்பு கொடுத்தால் வெடிகுண்டு வைத்த இடத்தை காட்டுவதாகவும், இப்படிக்கு அண்ணாதுரை என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து, ஆட்சியரக அலுவலா்கள் அளித்த தகவலின்பேரில், பெரம்பலூா் மாவட்ட வெடிகுண்டு மற்றும் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா், புதன்கிழமை இரவு ஆட்சியா் அலுவலகம் மற்றும் ஆட்சியரக வளாகம் முழுவதும் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர சோதனையில் ஈடுபட்டனா். வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்காததால், கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது மிரட்டல் என தெரியவந்தது. இதையடுத்து, கடிதத்தை எழுதியவா் யாா் என்பது குறித்து இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.