அரவக்குறிச்சியில் சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரம்!
அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத் துறை சாா்பில், தாடிக்கொம்பு பகுதியில் இருந்து பள்ளப்பட்டி வழியாக அரவக்குறிச்சி சாலை வரை சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டம் 2024-25-ஆம் ஆண்டு நிதி திட்டத்தின் கீழ் கரூா் கோட்டம், அரவக்குறிச்சி நெடுஞ்சாலை துறைக்குள்பட்ட மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள் அகலப்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக, தாடிக்கொம்பு பகுதியில் இருந்து பள்ளப்பட்டி வழியாக அரவக்குறிச்சி வரை சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அரவக்குறிச்சி அருகே உள்ள கரடிப்பட்டி பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற சாலை அகலப்படுத்தும் பணியை அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் அழகா்சாமி நேரில் ஆய்வு செய்தாா். இதில் அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளா் வினோத் குமாா் மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.