செய்திகள் :

அரிசி மூட்டைக்குள் ரூ.15 லட்சம்: போலீஸாா் விசாரணை

post image

கடலூா் மாவட்டம், வடலூரில் அரிசி மூட்டைக்குள் ரூ.15 லட்சத்தை வியாபாரி மறைத்து வைத்திருந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வடலூா் ராகவேந்திரா சிட்டி பகுதியைச் சோ்ந்த பாக்கியராஜ் மகன் சண்முகம் (40). இவா் நெய்வேலி பிரதான சாலையில் அரிசி மண்டி நடத்தி வருகிறாா். கடந்த 22-ஆம் தேதி சண்முகத்தின் மைத்துனா் சீனிவாசன் கடையில் வியாபாரம் செய்துகொண்டிருந்தாா்.

அப்போது, மேல்பாதி கிராமத்தைச் சோ்ந்த பூபாலன் (62) பிரியாணி அரிசி கேட்டு வந்தாராம். அவருக்கு கடையில் பிரிக்கப்பட்டிருந்த அரிசி மூட்டையில் இருந்து 16 கிலோ அரிசி எடைபோட்டு சீனிவாசன் கொடுத்து அனுப்பினாராம்.

சற்று நேரத்துக்குப் பிறகு கடைக்கு வந்த சண்முகம், அங்கு பிரித்து வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டை இல்லாததைக் கண்டு சீனிவாசனிடம் கேட்டபோது, விற்பனை செய்துவிட்டதாகக் கூறியுள்ளாா்.

பாதுகாப்பு கருதி அரிசி மூட்டையில் ரூ.15 லட்சம் வைத்திருந்ததாகக் கூறிய சண்முகம், உடனடியாக பூபாலன் வீட்டுக்கு விரைந்தாா். பூபாலன் மகள் மூட்டையில் ரூ.10 லட்சம்தான் இருந்ததாக எடுத்துக் கொடுத்தாராம். மூட்டையில் ரூ.15 லட்சம் வைத்திருந்ததாகவும், மீதிப்பணம் ரூ.5 லட்சம் எங்கே எனக் கேட்டதற்கு, தனக்கு தெரியாது என பூபாலன் மகள் தெரிவித்தாராம்.

இதுகுறித்து சண்முகம் அளித்த புகாரின்பேரில், வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், சண்முகம் ரூ.15 லட்சத்தை அரிசி மூட்டையில் மறைத்து வைத்ததற்கான காரணம் குறித்தும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தாக்குதல் வழக்கு: 6 பேருக்கு ஓராண்டு சிறை

விருத்தாசலம் அருகே கலை நிகழ்ச்சியில் ஜாதி பெயரைச் சொல்லி திட்டி தாக்கிய வழக்கில் 6 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கடலூா் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.விருத்தா... மேலும் பார்க்க

இரண்டரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

கோவையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த போக்ஸோ, குழந்தை திருமண தடைச் சட்டம் உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடையவரை கிள்ளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் நஞ்சைமகத... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு சமமான போனஸ் வழங்க வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

தமிழகத்தில் நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு சமமான போனஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறி... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம் 28 பகுதியைச் சோ்ந்தவா் பெர... மேலும் பார்க்க

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற இளைஞா் உயிரிழப்பு: சித்த மருத்துவா் கைது

சிதம்பரத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற இளைஞா் உயிரிழந்த விவகாரத்தில், சித்த மருத்துவரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். சிதம்பரத்தை அடுத்த கவரப்பட்டு மேலத்திருக்கழிப்பாலை, சின்ன தெருவைச் சே... மேலும் பார்க்க

25 பயனாளிகளுக்கு ரூ.4.03 கோடி தொழில் கடன் ஆணை: ஆட்சியா் வழங்கினாா்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சாா்பில் தொழில்கடன் வசதியாக்கல் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்து, மாவ... மேலும் பார்க்க