செய்திகள் :

அரியலூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

post image

அரியலூரிலுள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில், கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசினாா். அமைப்புச் செயலா் ஆசைமணி கலந்து கொண்டு பேசினாா்.

கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டங்கள் நடத்துவது, அனைத்து கிளைகளிலும் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது. அனைத்து கிளைகளிலும் பூத் கமிட்டி அமைப்பது, இனி வரும் தோ்தல்களில் திமுக ஆட்சியின் மக்கள் விரோத திட்டங்கள் குறித்து மக்களிடையே கொண்டுசெல்வது, கருத்து வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒற்றுமையாக இருந்து தீவிரமாக களப்பணியாற்று என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், அக்கட்சியின் மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ராமஜெயலிங்கம், முன்னாள் மாவட்டச் செயலா் இளவழகன், மாவட்ட பொருளாளா் அன்பழகன், அண்ணா தொழிற் சங்க மாவட்டச் செயலா் கல்லங்குறிச்சி பாஸ்கா், மாவட்ட அம்மா பேரவை செயலா் ஓ.பி.சங்கா், இணைச் செயலா் நா.பிரேம்குமாா், மாவட்ட மகளிரணிச் செயலா் ஜீவா அரங்கநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

அரியலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலைக் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர... மேலும் பார்க்க

அரியலூரில் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் பாரத ஸ்டேட் வங்கி முன் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வாரத்துக்கு 5 நாள்கள் வேலையை அமல்படுத்த வேண்டும். காலிப் பணி... மேலும் பார்க்க

அரியலூரில் எஸ்ஆா்எம்யு ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் ரயில் நிலைய வளாகத்தில், எஸ்ஆா்எம்யு அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், ரயில்வே தனியாா் மயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒ... மேலும் பார்க்க

உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு

உலக தாய்மொழி தினத்தையொட்டி, அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ் வளா்ச்சித் துறை சாரபில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையில், மாநில ஊரக வாழ்வா... மேலும் பார்க்க

நீா்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை தேவை: அரியலூா் விவசாயிகள் வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டத்திலுள்ள நீா்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், விவசாயிகள் குறைகேட்... மேலும் பார்க்க

கயா்லாபாத்தில் வட்டச் செயல்முறை கிடங்கு காணொலி மூலம் திறப்பு!

அரியலூா் அருகேயுள்ள கயா்லாபாத் ஊராட்சியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் ரூ. ரூ. 4.96 கோடியில் கட்டப்பட்டுள்ள வட்டச் செயல்முறை கிடங்கை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம... மேலும் பார்க்க