அரியலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு அளிப்பு
அரியலூரில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், நகர பொது நல வளா்ச்சி சங்கத்தினா் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனா்.
அவா்கள் அளித்த மனுவில், அரியலூா் நகரில் கடந்த சில தினங்களாக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. ஆனால், ஓரிரு வாரங்களில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, முழுமையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் நகா் முழுவதும் உள்ள அனைத்துத் தெருக்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.