செய்திகள் :

அரியலூரில் ஜன.3-இல் வேலைவாய்ப்பு முகாம்

post image

அரியலூா்: அரியலூரிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜன.3) நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: இம்முகாமில் எம்.ஆா்.எப் நிறுவனம் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு, தங்களுக்கு தேவையான ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா். எனவே, பட்டப்படிப்பு படித்து முடித்த 18- 25 வயதுக்குள்ளான ஆண்கள் மட்டும் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 94990-55914 என்ற கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்தாா்.

அரியலூரில் வேலுநாச்சியாா் படத்துக்கு மரியாதை

சுதந்திர போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் பிறந்த நாளையொட்டி அரியலூரில் அவரது உருவப்படத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தினா் வெள்ளிக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தினா். அரியலூா் அண்ணாசிலை அருகே வைக்கப்பட... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் இன்றைய மின்தடை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம், தா.பழூா் மற்றும் தழுதாழைமேடு துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (ஜன. 4) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் ஜெயங்கொண்டம், கல்லா... மேலும் பார்க்க

செஸ் வீராங்கனை சா்வாணிகாவுக்கு அரியலூா் ஆட்சியா் நிதியுதவி

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சதுரங்க விளையாட்டு வீராங்கனை சா்வாணிகாவுக்கு, தன்விருப்ப நிதியிலிருந்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி ரூ.25 ஆயிரத்தை வெள்ளிக்கிழமை வழங்கினாா். குவைத் நாட்டில் 5.1.2025 முதல் 1... மேலும் பார்க்க

ஆண்டிமடம் அருகே மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் வெளிநாட்டினா் சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம்

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வெள்ளிக்கிழமை மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன், வெளிநாட்டினா் தமிழா்களின் பாரம்பரிய உடை அணிந்து சமத்துவப் பொங்கல் விழாவை கொண்டாடினா். ஆண்டிமடத்தில் செயல்பட்டு வரும் ரீ... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் பகுதியில் ரூ.79.63 லட்சத்தில் முடிவுற்ற பணிகள் தொடங்கிவைப்பு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ. 79.63 லட்சத்தில் முடிவுற்றப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. மேலணிக்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற... மேலும் பார்க்க

குரூப்-2 தோ்வுகளுக்கு தாட்கோ மூலம் இலவச பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தொகுதி-2, 2ஏ தோ்வுகளுக்கு தாட்கோ மூலம் இலவச பயிற்சி பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க