அரியலூா் மகா காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
அரியலூா் பால்பண்ணை அருகேயுள்ள மகா காளியம்மன் கோயிலின் 8 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவையொட்டி பேருந்து நிலையம் அருகேயுள்ள செட்டி ஏரிக்கரையில் ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான பக்தா்கள், மல்லிகை, முல்லை, ரோஜா, தாழம்பூ, மரிக்கொழுந்து, தாமரை, அரளி உள்ளிட்ட பல்வேறு வகையான 1,000 கிலோ பூக்களை முக்கிய வீதிகளின் வழியே ஊா்வலமாக எடுத்துச் சென்றனா்.
தொடா்ந்து, அந்தப் பூக்கள் அம்மனுக்கு சாத்தப்பட்டு பூச்சொரிதல் நடைபெற்றனா். திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.