செய்திகள் :

மக்கள் ஆதரவில் பெருசு திரைப்படம்..!

post image

அறிமுக இயக்குநர் இளங்கோ ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பெருசு’.

இப்படத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, முனீஸ்காந்த், நிஹாரிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அருண்ராஜ் இசையமைத்துள்ளார்.

மரணப்படுக்கையில் இருந்த குடும்ப பெரியவரின் இறப்பில் நேரும் ஒரு சம்பவம் குறித்த துயர நகைச்சுவைக் கதையாக ’அடல்ட் காமெடி’ பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படம் மார்ச் 14 அன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

சமீபத்தில் படத்தின் ஸ்னீக் பீக் விடியோ வெளியாகி கவனம் ஈர்த்தது. வைபவ்-க்கு இந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் 2ஆவது வாரத்திலும் 150க்கும் அதிகமான திரைகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

50 போட்டிகளில் 36 க்ளீன் ஷீட்ஸ்..! பிரமிக்க வைக்கும் ஆர்ஜென்டீன கோல்கீப்பர்!

கத்தாரில் நடைபெற்ற 22-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ‘பெனால்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி 3-ஆவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது ஆா்... மேலும் பார்க்க

பராசக்தி வெளியீடு எப்போது? தயாரிப்பாளர் பதில்!

சிவகார்த்திகேயன் நடித்துவரும் பராசக்தி படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் சுதா கொங்... மேலும் பார்க்க

எம்புரான்: ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்காமல் நடித்த மோகன்லால்!

எம்புரான் படத்தில் நடித்ததுக்காக நடிகர் மோகன்லால் ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்கவில்லை என இயக்குநர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் தி... மேலும் பார்க்க

இந்திய சினிமாவின் வரலாற்றை மாற்றியமைத்த எம்புரான்!

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது. வெளியாகும் முன்பே எம்புரான் புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கான புரமோஷன் பண... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் யதோத்தக்காரி பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம்!

காஞ்சிபுரம் யதோத்தக்காரி பெருமாள் திருக்கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், சத்... மேலும் பார்க்க

மெஸ்ஸி இல்லாமலே வென்ற நடப்பு சாம்பியன்..! ரெட் கார்டு வாங்கிய ஆர்ஜென்டீன வீரர்!

கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் உருகுவே அணியை ஆர்ஜென்டீனா வென்றது.தென் அமெரிக்க உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் உருகுவே அணியும் ஆர்ஜென்டீனா அணியும் பலப்பரீட்டை செய்தது. கோல் அடித்த இள... மேலும் பார்க்க