மெஸ்ஸி இல்லாமலே வென்ற நடப்பு சாம்பியன்..! ரெட் கார்டு வாங்கிய ஆர்ஜென்டீன வீரர்!
கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் உருகுவே அணியை ஆர்ஜென்டீனா வென்றது.
தென் அமெரிக்க உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் உருகுவே அணியும் ஆர்ஜென்டீனா அணியும் பலப்பரீட்டை செய்தது.
கோல் அடித்த இளம் வீரர்
நட்சத்திர வீரர் மெஸ்ஸி இல்லாமல் களமிறங்கிய ஆர்ஜென்டீனா அணியின் இளம் வீரர் தியாகோ அல்மாடா 68ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார்.
ரெட் கார்டு வாங்கிய ஆர்ஜென்டீன வீரர்
போட்டியில் 56 சதவிகித பந்தினை உருகுவே அணி தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் இலக்கை நோக்கி 2 முறை மட்டுமே அடித்தது.
ஆர்ஜென்டீனா அணி வீரர் நிகோலஸ் கோன்ஜலிஸ் 90+5ஆவது நிமிஷத்தில் பந்தினை உதைப்பதற்கு பதிலாக தவறுதலாக எதிரணி வீரரின் தலையில் உதைத்தால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.
கடைசிவரை கோல் அடிக்காத உருகுவே அணியை ஆர்ஜென்டீனா 1-0 என வென்றது.
ஆர்ஜென்டீனா தகுதிபெற என்ன செய்ய வேண்டும்?
தென்னமரிக்க கண்டத்தில் 10 அணிகள் மொத்தம் 18 போட்டிகள் விளையாடும் இந்தத் தகுதிச் சுற்றில் ஆர்ஜென்டீனா அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
அடுத்த பிரேசில் அணியுடன் டிரா செய்தாலே போதுமானது ஆர்ஜென்டீனா அணி தகுதிபெற்றுவிடும். இந்தப் போட்டியிலும் மெஸ்ஸி விளையாடமாட்டார்.
13 போட்டிகளில் 28 புள்ளிகளுடன் ஆர்ஜென்டீனா முதலிடத்தில் நீடிக்கிறது.