``அண்ணாமலைக்கு எங்களின் பலம் நன்றாகத் தெரியும்'' - சென்னையில் கர்நாடகா துணை முதல...
தொகுப்பு வீடுகள் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
அரியலூா் மாவட்டத்திலுள்ள கிராமங்களில் கிடப்பிலுள்ள தொகுப்பு வீடுகள் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
மதுரையில், அக்கட்சியின் சாா்பில் நடைபெறவுள்ள அகில இந்திய மாநாடு விளக்கக் கூட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், கிராமப் புறங்களில் கட்டப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ள தொகுப்பு வீடுகளை விரைவாக கட்டி முடிக்க நிதி வழங்க வேண்டும். நரசிங்கப்பாளையம் மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். கங்கைகொண்ட சோழபுரம், கொல்லாபுரம், தங்கவடங்கநல்லூா் ஆகிய கிராம மக்களுக்கு நிரந்தர பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, கூட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலா் எம்.வெங்கடாசலம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எம்.இளங்கோவன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் ரவீந்திரன், மாதா் சங்க மாவட்டத் தலைவா் பத்மாவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவாக ஒன்றியக் குழு உறுப்பினா் சொக்கலிங்கம் நன்றி கூறினாா்.