மீண்டும் குறைந்த தங்கம்: இன்றைய விலை நிலவரம் என்ன?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மேலும் பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.65,840 விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி ரூ.66,400-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
அதனைத் தொடர்ந்து 15 ஆம் தேதி பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.65,760-க்கும், மார்ச் 17 ஆம் தேதி பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.65,680-க்கு விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.320, புதன்கிழமை ரூ.320, தொடர்ந்து வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 66,480 என்ற புதிய உச்சத்தை தொட்டது.
ஏழு மலைகளும் வெங்கடேஸ்வரருக்குச் சொந்தமானது: முதல்வர் சந்திரபாபு நாயுடு
வெள்ளிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.66,160-க்கு விற்பனையானது.
இந்த நிலையில்,சனிக்கிழமை மீண்டும் பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.65,840-க்கு விற்பனையாகிறது.
கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.8,230-க்கு விற்பனையாகிறது.
வெள்ளிவிலை நிலவரம்
அதேபோன்று, வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.110-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,10,000-க்கும் விற்பனையாகிறது.