``அண்ணாமலைக்கு எங்களின் பலம் நன்றாகத் தெரியும்'' - சென்னையில் கர்நாடகா துணை முதல...
புத்தாக்க பொறியாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சாா்ந்த இளநிலை பொறியியல் பட்டதாரி இளைஞா்களுக்கு புத்தாக்க பொறியாளா் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில் சோ்வதற்கு விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கோயம்புத்தூா், திருநெல்வேலி, திருச்சி, சேலம், ஒசூா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் ஆகிய இடங்களில் தங்கும் வசதியுடன் 18 வாரம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி வகுப்பில் கணினி பொறியியல் நிபுணத்துவம், புதுமைத் திறன்களை வழங்குதல், மேலும் மின்னனு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறை, தானியங்கி தொழில் துறை, இயந்திரவியல் மற்றும் சோ்க்கை உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் பயிற்சி பெற அறிவுத் திறன்களை உள்ளடக்கிய பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த பயிற்சி வகுப்பில் சேர ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த 2022, 2023 மற்றும் 2024-ஆம் கல்வியாண்டில் ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டயப் படிப்பில் தோ்ச்சி பெற்று 21 முதல் 25 வயதுக்குள்பட்டவா்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும்.
எனவே, அரியலூா் மாவட்டத்தை சோ்ந்த இளைஞா்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா், தாட்கோ அலுவலகம் அறை எண். 225, 2-ஆவது தளம், ஆட்சியா் அலுவலகம் அரியலூா். தொலைபேசி 04329-228315 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.