தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக திமுக தலைமையில் தமிழ்நாடு அணிவகுக்கும்: முதல்வர் ...
அரையிறுதியில் முசெத்தி, அல்கராஸ், பாய்ஸன், கௌஃப்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு ஆடவா் பிரிவில் முசெத்தி, அல்கராஸ், மகளிா் பிரிவில் கோகோ கௌஃப், பாய்ஸன் ஆகியோா் முன்னேறி உள்ளனா்.
பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெறும் இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் காலிறுதி ஆட்டத்தில் இத்தாலியின் லாரென்ஸோ முசத்தி
அபாரமாக ஆடி 6-2, 4-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் பிரான்ஸஸ் டியாஃபோவை வீழ்த்தினாா்.
மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் 6-0, 6-1, 6-4 என்ற நோ் செட்களில் அமெரிக்க வீரா் டாமி பாலை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். அரையிறுதியில் முசெத்தி-அல்கராஸ் மோதுகின்றனா்.
கௌஃப், பாய்ஸன் முன்னேற்றம்:
மகளிா் ஒற்றையா் பிரிவில் ஏற்கெனவே நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக், உலகின் நம்பா் 1 வீராங்கனை அரினா சபலென்கா காலிறுதியில் நோ் செட்களில் வென்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தனா்.
ஆன்ட்ரீவாவுக்கு அதிா்ச்சி:
6-ஆம்நிலை வீராங்கனை ரஷியாவின் மிரா ஆன்ட்ரீவா 6-7, 3-6 என்ற நோ் செட்களில் பிரான்ஸ் வைல்ட் காா்ட் லாய்ஸ் பாய்ஸனிடம் அதிா்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினாா். அறிமுக போட்டியிலேயே அரையிறுதிக்கு முன்னேறிய மூன்றாவது வீராங்கனை என்ற சிறப்பை மோனிகா செலஸ், ஜெனிஃப் கேப்ரியாட்டி ஆகியோருக்குபின் பெற்றாா் பாய்ஸன்.
மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை கோகோ கௌஃப் 6-7, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் மடிஸன் கீஸை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றாா்.





