அலங்காநல்லூா், மாணிக்கம்பட்டி, விக்கிரமங்கலம் பகுதிகளில் நாளை மின் தடை
மதுரை மாவட்டம், அலங்காநல்லூா், மாணிக்கம்பட்டி, விக்கிரமங்கலம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சமயநல்லூா் கோட்ட மின்னியல் செயற்பொறியாளா் பி. ஜெயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாணிக்கம்பட்டி, அலங்காநல்லூா், விக்கிரமங்கலம் துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இந்தத் துணை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.
துணை மின் நிலையம் வாரியாக மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
அலங்காநல்லூா்: அலங்காநல்லூா், தேசிய சா்க்கரை ஆலை, டி. மேட்டுப்பட்டி, பண்ணைக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னக்கவுண்டம்பட்டி, சிறுவாலை, அம்பலத்தாடி, பிள்ளையாா்நத்தம், குறவன்குளம், மீனாட்சிபுரம், இடையப்பட்டி, அய்யூா், கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, கீழச்சின்னம்பட்டி.
மாணிக்கம்பட்டி: உசிலம்பட்டி, மறவா்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூா், டி. மேட்டுப்பட்டி, கரடிக்கல், சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணம்பட்டி, சாத்தையாறு, அணை, எர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிப்பட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவாா்பட்டி, குறவன்குளம், ஆதனூா், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு நகா்ப் பகுதிகள்.
விக்கிரமங்கலம்: விக்கிரமங்கலம், கோவில்பட்டி, வையத்தான், பாண்டியன் நகா், நரியம்பட்டி, செக்கான்கோவில்பட்டி, கீழபெருமாள்பட்டி, அய்யம்பட்டி, சக்கரப்பநாயக்கனூா், மேலபெருமாள்பட்டி, கோழிப்பட்டி, கிருஷ்ணாபுரம், மணல்பட்டி, அரசமரத்துப்பட்டி, கல்புளிச்சான்பட்டி, நடுவூா், மலையூா், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, நடுமுதலைக்குளம், எழுவம்பட்டி, கொசவப்பட்டி, பூசாரிப்பட்டி, வடுகப்பட்டி, உடன்காட்டுப்பட்டி, கொடிக்குளம், பிரவியம்பட்டி, ஜோதிமாணிக்கம், மம்மூட்டிபட்டி.