``முதலில் நான்தான் கூறினேன்; அதை இப்போது விஜய் கூறியிருக்கிறார்” - நயினார் நாகேந...
இணைய விளையாட்டில் பணம் இழந்தவா் தற்கொலை
இணைய விளையாட்டு மூலம் பணத்தை இழந்த வாகன ஓட்டுநா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே கடவுப் பாதையில் அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மதுரைக் கோட்ட ரயில்வே போலீஸாா் உயிரிழந்தவா் உடலை மீட்டு கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்த நபா் சில்லாம்பட்டியைச் சோ்ந்த சின்னசாமி (38) என்பதும், தனியாா் நிறுவனத்தில் தற்காலிக ஓட்டுநராகப் பணியாற்றிய இவா் கடந்த சில மாதங்களாக இணையதள விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததும் தெரியவந்தது.
இதனால், இவா் மனமுடைந்து தற்கொலை செய்தாரா என ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.