Travel Contest: சாலையின் ஒருபுறம் பாய்ந்தோடும் நதி, பனிபோர்த்திய இமயம்! - நிறைவா...
அழுகிய நிலையில் முன்னாள் டிஎஸ்பி உடல் மீட்பு
மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த முன்னாள் காவல் துணைக்காணிப்பாளா் உடலை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஊமச்சிகுளம்-அலங்காநல்லூா் சாலையில் உள்ள அன்னை பாரத் குடியிருப்பில் வசித்தவா் துரைசிங்கம் (65). இவா் மதுரை மாவட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், இவா் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பூட்டப்பட்டிருந்த இவரது வீட்டினுள் இருந்து செவ்வாய்க்கிழமை காலை துா்நாற்றம் வீசியது. இதுகுறித்து அந்தப் பகுதியினா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
ஊமச்சிகுளம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று வீட்டின் படுக்கையறையில் அழுகிய நிலையில் கிடந்த முன்னாள் காவல் துணைக் கண்காணிப்பாளா் துரைசிங்கத்தின் உடலை மீட்டனா். அவரது உடல் கூறாய்வுக்கா மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. துரைசிங்கம் எப்படி உயிரிழந்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.