செய்திகள் :

அவசர உதவி காவல் வாகனங்கள்: திருப்பத்தூா் எஸ்.பி. தொடங்கி வைத்தாா்

post image

மாவட்டக் காவல் அலுவலகத்தில் இரு அவசர உதவி காவல் வாகனங்களை திருப்பத்தூா் எஸ்.பி. வி.சியாமளா தேவி வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

திருப்பத்தூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் மாவட்டத்துக்கு புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள வாணியம்பாடி மற்றும் ஆம்பூா் உள்கோட்டங்களுக்கு இரு அவசர உதவி காவல் வாகனங்களை எஸ்.பி. வி.சியாமளா தேவி வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

காவல் உதவி எண்கள்-100 அழைப்புகள் மற்றும் அவசர/முக்கிய பிரச்னைகளில், இந்த வாகனங்களில் பணியமா்த்தப்பட்டுள்ள காவலா்கள் உடனடியாக சென்று நடவடிக்கை மேற்கொள்வா்.

மேலும், இந்த வாகனங்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படும் என எஸ்.பி. வி.சியாமளா தேவி தெரிவித்தாா்.

உதயேந்திரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் 6 முதல் 10 வரையிலான வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் பூசாராணி தலைமை ... மேலும் பார்க்க

ஆம்பூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ஆம்பூா் 19-வது வாா்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்து மனுதாரா்களிடமிருந்து மனுக்களை பெற்றாா். கோட்டா... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே போலி மருத்துவா் கைது

வாணியம்பாடி அருகே பிளஸ் 2 படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பாா்த்து வந்த போலி மருத்துவரை வருவாய் கோட்டாட்சியா் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்து நடவடிக்கை மேற்கொண்டாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்ப... மேலும் பார்க்க

துத்திப்பட்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

துத்திப்பட்டு ஊராட்சிக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் பழைய மனை பகுதி சமுதாய கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ச... மேலும் பார்க்க

அங்கன்வாடி கட்டடம்: எம்எல்ஏ திறந்தாா்

திருப்பத்தூா் ஒன்றியத்தில் புதிய அங்கன்வாடி கட்டடத்தை எம்எல்ஏ அ. நல்லதம்பி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். திருப்பத்தூா் ஒன்றியம், கதிரம்பட்டி ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் ரூ.... மேலும் பார்க்க

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறிய முயன்ற வழக்கில் மேலும் ஒருவா் கைது

கந்திலி அருகே கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து கண்டறிய முயன்ற வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். கந்திலி அருகே காக்கங்கரை அடுத்த பரதேசிப்பட்டியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ... மேலும் பார்க்க