நீண்ட நேரப் பணி, உடல் சோா்வு, செயல் திறனைக் குறைக்கும்: செளமியா சுவாமிநாதன்
`அவர்கள் யாரையுமே எனக்குத் தெரியாது..' - 900 பேரின் மில்லியன் டாலர் கடனை அடைத்த ஹாலிவுட் நடிகர்!
இங்கிலாந்து தெற்கு வேல்ஸில் உள்ள டாடா ஸ்டீல் ஆலை கடந்த செப்டம்பர் மாதம் மூடப்பட்டது. இதனால், அந்த ஆலையில் பணிபுரிந்த கிட்டதட்ட 2,800 பேர் வேலையிழந்தனர். இதனால், ஆலை மூடலுக்கு பெரியளவில் எதிர்ப்பு எழுந்தது.
இந்த ஆலை மூடலால் வேலையிழந்த தொழிலாளர்கள் கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளர். இதை தீர்க்கும் விதமாக ஹாலிவுட் நடிகர் மைக்கேல் ஷீன் கடன் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து தெற்கு வேல்ஸில் உள்ள தனது பிறந்த ஊரில் இருக்கும் 900 பேரின் 1 மில்லியன் டாலர் கடனை அடைக்க உதவி செய்துள்ளார். இதுக்குறித்த ஒரு ஷோ வெளியாக உள்ளது.
இதுக்குறித்து பேசிய மைக்கேல் ஷீன், 'நான் கடன் அடைத்த 900 பேர் யார் என்று எனக்கு முன்னரும் தெரியாது... இப்போதும் அவர்கள் யார் என்று தெரியாது" என்று கூறியுள்ளார்.

கடன் நிறுவனம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஷீன், "ஒரு நிறுவனத்திடம் இருந்து ஒவ்வொருவராக பல பேர் கடன் வாங்கியிருப்பார்கள். அந்தக் கடன்களை ஒன்றாக சேர்ந்து 'பண்டிலாக' நாங்கள் எங்கள் நிறுவனத்தின் மூலம் அந்தக் கடன்களை வாங்கிவிட்டோம்.
முன்னர் கூறிய நிறுவனத்திடம் கடன் வாங்கியவர்கள் இப்போது எங்களிடம் கடனை திருப்பி செலுத்துவார்கள். ஆனால், முன்னர் இருந்தத் தொகைக்கு அந்தக் கடன் இருக்காது. குறைந்த தொகைக்கு தான் அந்தக் கடன் இருக்கும். அதனால், அவர்கள் எளிதாக இந்தக் கடனை அடைக்கலாம்" என்று விளக்கியுள்ளார்.
மேலும் அவர் பேசும்போது, "ஒருக்கட்டத்தில் இந்த நிறுவனம் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன். அப்போது என் சொந்த ஊரில் இருக்கும் கஃபேவிற்கு டாக்குமென்டிங் செய்யப்போகும்போது, அங்கே வேலை செய்யும் ஒரு பெண்மணி வேலையிழந்த தொழிலாளர்களின் கண்ணீர் குறித்து கூறினார். அப்போது தான் அவர்களுக்கு என்னால் உதவ மட்டும் தான் முடியும் என்று உணர்ந்து இந்த நிறுவனத்தை தொடர்ந்தேன்" என்று கூறியுள்ளார்.