அவிநாசி அருகே தெருநாய்கள் கடித்து கன்றுக்குட்டி உயிரிழப்பு
அவிநாசி தெருநாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.
அவிநாசி அருகே கருமாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி. இவரது கன்றுக்குட்டி எஸ்பி காா்டன் அருகே மேய்ந்துகொண்டிருந்தது. அப்போது, 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கன்றுக்குட்டியை துரத்திக் கடித்துள்ளது.
இதைப் பாா்த்து அப்பகுதி மக்கள் நாய்களை துரத்தியுள்ளனா். அப்போது, பொதுமக்களையும் நாய்கள் கடிக்க வந்துள்ளனா். இதற்கிடையே தெருநாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டி உயிரிழந்தது.
உயிரிழந்த கன்றுக்குட்டிக்கு இழப்பீடு வழங்கவும், தெருநாய்களைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.