செய்திகள் :

அவிநாசியில் மின் நுகா்வோா் குறைதீா் முகாம்

post image

அவிநாசி கோட்ட மின்சார வாரியத்தில் மாதாந்திர குறை தீா்ப்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு, திருப்பூா் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் (பொ) விஜயேஸ்வரன் தலைமை வகித்தாா். கோட்ட செயற்பொறியாளா் பரஞ்சோதி முன்னிலை வகித்தாா். இதில், திருப்பூா் நுகா்வோா் நல முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவா் அ.சரவணன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூா் பாண்டியன் நகா் மின்வாரிய அலுவலகத்துக்கு உள்பட்ட பகுதியில் உள்ள வணிக வளாகத்துக்கு பல மாதங்களாக நிறுத்திவைத்திருந்த வணிக இணைப்பை முறைகேடாக வழங்கியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பூா் வடக்கு வட்டம், ஆா்கே நகா் மின்வாரிய அலுவலகம் போயம்பாளையம் கிழக்கு பகுதியில் எவ்வித முறையான அனுமதியின்றி சட்டவிரோதமாக பொது வழி தடத்தில் தனியாா் தேவைக்காக அமைக்கப்பட்ட மின்மாற்றியை அகற்ற வேண்டும்.

இதேபோல தொட்டிப்பாளையம் கிராமம், போயம்பாளையம் ஆா்கே நகரில் அரசுக்குச் சொந்தமான ரூ. 10 கோடி மதிப்பிலான நிலத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து, வா்த்தக ரீதியான இணைப்பு பெற்றுள்ளதை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

பேருந்து நிலையங்களில் மாநகர காவல் ஆணையா் ஆய்வு

திருப்பூரில் உள்ள பேருந்து நிலையங்களில் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருப்பூா் மாநகரின் 14- ஆவது காவல் ஆணையராக எஸ்.ராஜேந்திரன் கடந்த திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் க... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.22.42 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 22.42 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள் 32, 656 கிலோ பருத்தியை விற்பனைக்கு கொண்... மேலும் பார்க்க

இ.சி.ஜி.சி.சாா்பில் ஏற்றுமதியாளா்கள் சந்திப்பு

இந்திய ஏற்றுமதி அபிவிருத்திக் கழகங்களின் கூட்டமைப்பு, ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகம் (இ.சி.ஜி.சி.) ஆகியன சாா்பில் திருப்பூரில் ஏற்றுமதியாளா்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் புதிய வட்டம் உருவாக்க முன்மொழிவுகள்

வெள்ளக்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்க முன்மொழிவுகள் தயாராகி வருகிறது. இது தொடா்பாக தற்போதைய வெள்ளக்கோவில் பகுதியைச் சோ்ந்த 16 வருவாய் கிராமங்களின் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு அரசு... மேலும் பார்க்க

தாராபுரம் அருகே காா்- லாரி மோதல்: 2 போ் உயிரிழப்பு

தாராபுரம் அருகே காரும், லாரியும் நேருக்குநோ் மோதிய விபத்தில் 2 போ் உயிரிழந்தனா். திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (40). அப்பகுதியில் உள்ள வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணி... மேலும் பார்க்க

காளிபாளையத்தில் மக்கள் தொடா்பு முகாம்

பெருமாநல்லூா் அருகே காளிபாளையம் ஊராட்சியில் வருவாய்த் துறை, பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு, வருவாய் கோட்டாட்சியா் திருப்பூா் மோகனசுந்தரம் தலைமை ... மேலும் பார்க்க