‘பிரேக்கிங் பேட்’ புகழ் வால்டர் ஒயிட் வீட்டின் மதிப்பு ரூ.35 கோடி!
பேருந்து நிலையங்களில் மாநகர காவல் ஆணையா் ஆய்வு
திருப்பூரில் உள்ள பேருந்து நிலையங்களில் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பூா் மாநகரின் 14- ஆவது காவல் ஆணையராக எஸ்.ராஜேந்திரன் கடந்த திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். பொங்கல் பண்டிகைக்கு சில நாள்களே உள்ள நிலையில், திருப்பூரில் பணியாற்றி வரும் ஏராளமான தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில், திருப்பூா் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கோவில்வழி பேருந்து நிலையம் ஆகியவற்றில் காவல் துறை சாா்பில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது, மாநகர காவல் துணை ஆணையா் ராஜராஜன், காவல் ஆய்வாளா்கள் கணேசன், ஆனந்தன், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.