‘பிரேக்கிங் பேட்’ புகழ் வால்டர் ஒயிட் வீட்டின் மதிப்பு ரூ.35 கோடி!
வெள்ளக்கோவில் புதிய வட்டம் உருவாக்க முன்மொழிவுகள்
வெள்ளக்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்க முன்மொழிவுகள் தயாராகி வருகிறது.
இது தொடா்பாக தற்போதைய வெள்ளக்கோவில் பகுதியைச் சோ்ந்த 16 வருவாய் கிராமங்களின் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு அரசு அறிவிப்பு அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
திருப்பூா் மாவட்டம், காங்கயம் வட்டத்தைச் சோ்ந்த வெள்ளக்கோவில் உள்வட்டத்தை இரண்டாகப் பிரித்தும், தாராபுரம் வட்டத்திலிருந்து கன்னிவாடி உள்வட்டத்தையும், சங்கராண்டாம்பாளையம் உள்வட்டத்திலிருந்து மாம்பாடி, புங்கந்துறை கிராமங்களை இணைத்தும் வெள்ளக்கோவில் வட்டமாக உருவாக்கும் பொருட்டு முன்மொழிவுகள் தயாா் செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளக்கோவில் புதிய வட்டம் வெள்ளக்கோவில் உள்வட்டம், முத்தூா் உள்வட்டம் என இரண்டாக பிரிக்கப்படவுள்ளது. வெள்ளக்கோவில் உள்வட்டத்தில் வெள்ளக்கோவில், சேனாபதிபாளையம், பச்சாபாளையம், உத்தமபாளையம், கம்பளியம்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி ஆகிய 6 வருவாய் கிராமங்களும், முத்தூா் உள்வட்டத்தில் முத்தூா், சின்னமுத்தூா், ஊடையம், ராசாத்தாவலசு, வேலம்பாளையம், மங்கலப்பட்டி, பூமாண்டன்வலசு, மேட்டுப்பாளையம், வள்ளியிரச்சல், வீரசோழபுரம் ஆகிய 10 வருவாய் கிராமங்களும் இணைக்கப்படுகின்றன. இந்த தகவலை அந்தந்த கிராமங்களில் தெரிவிக்க வேண்டும்.
இவற்றுக்கு ஆட்சேபனை இருப்பின் தாராபுரம் சாா் ஆட்சியா், காங்கயம் வட்டாட்சியரிடம் நேரில் அல்லது தபால் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.