அவிநாசியில் ரூ.2.96 கோடியில் வளா்ச்சிப் பணிகள்
அவிநாசி வட்டாரப் பகுதிகளில் ரூ.2 கோடியே 96 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
அவிநாசி ஒன்றியம், செம்பியநல்லூா் ஊராட்சியில் அரசுப் பணியாளா் நகா்- எஸ்.மேட்டுப்பாளையத்தை இணைக்கும் சாலையில் உள்ள நல்லாறு நதியில் குறுக்கே பாலம் அமைக்கும் பணி, வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைத்தல், துலுக்கமுத்தூா் ஊராட்சி நல்லகட்டிபாளையம் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைத்தல், திருமுருகன்பூண்டி நகராட்சி வாா்டு 13-இல் திறன்மிகு வகுப்பறை அமைத்தல் என மொத்தம் ரூ.2 கோடியே 96 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா தொடங்கி வைத்தாா்.
இதில் மேயா் தினேஷ்குமாா், பொறுப்பாளா்கள் சரவணன்நம்பி, பழனிசாமி, சிவப்பிரகாஷ், பால்ராஜ், திராவிடன் வசந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.