தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்
சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.
மேட்டுப்பாளையம் கிராமம் எடைக்காட்டுவலசைச் சோ்ந்தவா் பழனி மனைவி பழனியம்மாள் (70). இவா் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றி வந்தாா். இவா் சனிக்கிழமை வேலைக்கு சென்றுவிட்டு, மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையைக் கடந்துள்ளாா்.
அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், உயிரிழந்தாா். புகாரின்பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.