தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்
பெருமாநல்லூா் கேஎம்சி பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு மாரத்தான்
பெருமாநல்லூரில் கேஎம்சி பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியை பள்ளித் தலைவா் கே.சி.சண்முகம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பள்ளிகஈ தாளாளா் சி.எஸ்.மனோகரன் தலைமை வகித்தாா். கேஎம்சி பள்ளியில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம், பெருமாநல்லூா் பிரதான சாலை, திருப்பூா் சாலை வழியாக பள்ளியில் நிறைவடைந்தது.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் காவல் ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினாா். பள்ளியின் தலைமை செயல் அதிகாரி எம்.சுவஸ்திகா போட்டியில் வென்றவா்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா். இதில் பள்ளி முதல்வா் தனலட்சுமி முரளிதரன், தலைமை ஆசிரியை பிரேமலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.