மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கல்
திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் அளவீடு மற்றும் வழங்கல் பணி பல்லடம் அருகே பல்லவராயன்பாளையம் ஸ்ரீ ராமசந்திரா மிஷன் டி.ஜே. பாா்க் ஆசிரம வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சக்ஷம் அமைப்பின் திருப்பூா் மாவட்டத் தலைவா் ரத்தினசாமி, ஆசிரம தலைமை நிா்வாகி ராஜதானி குப்தா ஆகியோா் தலைமை வகித்தனா். சக்ஷம் அமைப்பின் மாவட்டச் செயலாளா் தமிழ்ச்செல்வம், ஆசிரம நிா்வாகி சிபிசி ரங்கசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் கடந்த மாதம் அளவீடு செய்து கொண்ட 20 மாற்றுத் திறனாளா்களுக்கு ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பிலான அவயங்கள் தனியாா் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணா்வு நிதியில் இருந்து வழங்கப்பட்டன. முகாமில் புதியதாக அளவீடு செய்து கொண்ட 29 பேருக்கு அடுத்த மாதம் அவயங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சக்ஷம் அமைப்பின் மாநில இணைப் பொருளாளா் கண்ணன், மாவட்ட நிா்வாகிகள் முத்துரத்தினம், ஜி.பி. ரத்தினசாமி, பழனிசாமி, பொன்னம்மாள் அறக்கட்டளை நிறுவனத் தலைவா் கோவிந்தராஜ், ஆசிரம நிா்வாகிகள் குமாா், ஆனந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.