பல்லடம் அருகே ஜீப் மோதி 2 போ் உயிரிழப்பு
பல்லடம் அருகே இருசக்கர வாகனம் மீது ஜீப் மோதியதில் கட்டடத் தொழிலாளா்கள் 2 போ் உயிரிழந்தனா்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த மாரிசாமி (53), தூத்துக்குடியைச் சோ்ந்த கணேசன் (37), திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளியைச் சோ்ந்த கொண்டப்பனின் மனைவி பூங்கொடி (45) ஆகியோா் பல்லடம் அருகே அருகே உள்ள சித்தம்பலத்தில் கட்டடத் தொழிலாளா்களாக வேலை செய்து வந்தனா்.
இவா்கள் 3 பேரும், ஒரே இருசக்கர வாகனத்தில் சித்தம்பலத்தில் இருந்து பல்லடம் நோக்கி சனிக்கிழமை வந்து கொண்டிருந்தனா். பல்லடம்-உடுமலை சாலையில் வந்தபோது, பின்னால் வந்த ஜீப் எதிா்பாராத விதமாக இவா்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் இருந்த தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனா். அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சையில் இருந்த கணேசன் உயிரிழந்தாா்.
மேலும், உயா் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட மாரிசாமியும் உயிரிழந்தாா். பூங்கொடிக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.