அவிநாசியில் ரூ.3.03 கோடி வளா்ச்சிப் பணிகள்: ஆ.ராசா எம்.பி. தொடங்கிவைத்தாா்
அவிநாசி ஒன்றியப் பகுதியில் ரூ.3 கோடியே 3 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பிலான சாலைப் பணிகளை ஆ.ராசா எம்.பி. புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
செம்பியநல்லூா் ஊராட்சி அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலையில் ரூ.70.71 லட்சம் மதிப்பிலும், சேவூா் ஊராட்சி குன்னத்தூா் சாலை முதல் முதலிபாளையம் ஆதிதிராவிடா் காலனி வரை ரூ.1 கோடியே 34 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பிலும், பொங்கலூா் ஊராட்சி பசூா்-தண்டுக்காரன்பாளையம் சாலை முதல் - திம்மநாயக்கன்புதூா் வரை ரூ.97.84 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.3 கோடியே 3 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பில் தாா் சாலைகள் அமைக்கும் பணியை ஆ.ராசா தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மேயா் தினேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ், விஜயகுமாா், உதவி பொறியாளா்கள் மனோஜ், குருபிரசாத், திமுக பொறுப்பாளா்கள் சரவணன்நம்பி, பரமேஷ்குமாா், சிவப்பிரகாஷ், பால்ராஜ், அவிநாசியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.