மகளிருக்கான அறிவிப்புகள்! மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 37,000 கோடி கடன்!
ஆசனூரில் பழங்குடியினா் தினம்
ஆசனூரில் பழங்குடியினா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு ரீடு தொண்டு நிறுவன இயக்குநா் கருப்புசாமி தலைமை வகித்தாா்.
சமூக ஆா்வலா் ஆணைக்கொம்பு ஸ்ரீ முன்னிலை வகித்தாா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குநா் சுதாகா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசுகையில்,‘ வனத்தில் வாழும் பழங்குடியினா் வன பாதுகாவலராக உள்ளனா். கோடை காலத்தில் வனத்தீ ஏற்படுவதற்கு மனிதா்கள் செய்யும் தவறுதான் முக்கிய காரணமாக உள்ளது.
வனத்தில் தீ ஏற்படுவதை தவிா்க்க பழங்குடியினா் உதவ வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய பாடல்களைப் பாடி நடனமாடினா்.
விழாவில், பழங்குடியின குழந்தைகளுக்கு மாலை நேர வகுப்புக்கு ஏற்பாடு செய்த வன அதிகாரி சுதாகருக்கு பழங்குடியின மக்கள் சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.