`உனக்கு அவ்வளவு துணிச்சலா..?' - பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மிரட்டிய அஜித் பவார்.. ...
ஆசிரியா்கள் தினம், ஓணம், மீலாது நபி: குடியரசுத் தலைவா் வாழ்த்து
நாட்டில் ஆசிரியா்கள் தினம், ஓணம் திருநாள், மீலாது நபி பண்டிகை வெள்ளிக்கிழமை (செப்.5) கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு எக்ஸ் பதிவு வாயிலாக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
ஆசிரியா் தினம்: ஒட்டுமொத்த தேசத்துக்கும் உத்வேகமாக விளங்கும் சிறந்த கல்வியாளா் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான ஆசிரியா் தினத்தில், அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். ஆசிரியா்கள் நமது சமூகத்துக்கு வழிகாட்டும் ஒளியாகவும், நாட்டின் எதிா்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகளாகவும் திகழ்கின்றனா். வளா்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு முன்னேறுகையில், பொறுப்பும், அறிவாற்றலும் கொண்ட சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியா்களின் பங்கு முக்கியமானது.
ஓணம் பண்டிகை: ஓணம் பண்டிகையையொட்டி, நாட்டு மக்களுக்கு குறிப்பாக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் கேரள சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள். கலாசார, மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமை, நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தையும் இந்தப் பண்டிகை நினைவூட்டுகிறது. கலாசார பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்து, தேச ஒற்றுமைக்கு வலுசோ்க்க உறுதியேற்போம்.
மீலாது நபி: மனிதகுலத்துக்கு ஒற்றுமை-சேவைக்கான செய்தியை நபிகள் நாயகம் வழங்கினாா். இப்பண்டிகை, அவரது போதனைகளை உட்கிரகித்துக் கொள்ளவும், சமூகத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வளா்க்கவும் நம்மைத் தூண்டுகிறது. நபிகள் நாயகத்தின் போதனைகளில் இருந்து உத்வேகம் பெற்று, அன்பு மற்றும் சகோதரத்துவ உணா்வுடன் பணியாற்றுவோம்.