``ஆடு நனைக்கிறது என்று ஓநாய் அழுததாம்; எங்கள் மீது கரிசனம் காட்ட வேண்டாம்'' - எடப்பாடி சொல்வதென்ன?
சட்டபேரவையில் பட்ஜெட் தொடர்பான விவாதமும் பதிலுரையும் நடைபெற்று வருகிறது. அதிமுக வெளிநடப்பு செய்திருக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். "நிதி அமைச்சரின் பதில் உரையில் வார்த்தை ஜாலங்கள்தான் அதிகமாக இருந்ததே தவிர செயல்பாடுகள் ஒன்றும் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்த இந்த 4 ஆண்டுகளில் சுமார் 4.52 லட்சம் கோடி கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. அதையெல்லாம் மறைத்து நிதி அமைச்சர் பதில் அளித்துக்கொண்டிருக்கிறார்.

தேர்தல் அறிக்கையில் நிதி மேலாண்மை சரி செய்யப்படும் என்று தெரிவித்தார்கள். அதற்கு என்று குழுக்களையும் நியமித்திருந்தார்கள். ஆனால் எந்த ஒரு அறிக்கையையும் அவர்கள் தாக்கல் செய்யவில்லை. ஏதோ புள்ளி விவரங்களைச் சொல்லி திமுக அரசு மக்களை ஏமாற்றப் பார்க்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மீது மிகப்பெரிய கடனை சுமத்தி இருக்கிறது. இந்த ஆட்சியில் சுமார் 10,000 சிறு, குறுத்தொழில்கள் மூடப்பட்டிருக்கின்றன. பொய் செய்தி வெளியிட்டு மக்களை ஏமாற்றும் அரசாகத்தான் இந்த ஸ்டாலின் மாடல் அரசு இருக்கிறது.
பட்ஜெட் கணக்கைச் சரியாகச் செயல்படுத்துங்கள் என்று எங்களிடம் நிதி அமைச்சர் சொன்னார். எங்கள் கணக்கை எப்படி பார்க்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். 'ஆடு நனைக்கிறது என்று ஓநாய் அழுததாம்' எங்கள் மீது நீங்கள் கரிசனம் காட்டத் தேவையில்லை. அதிமுக கடந்த காலங்களில் எப்படிச் செயல்பட்டது என்று அனைவருக்கும் தெரியும்.

கொள்கை என்பது வேறு கூட்டணி என்பது வேறு. அறிவாலயத்தின் மேல் மாடியில் சிபிஜ விசாரணை நடத்தி வருகிறது. கீழ் மாடியில் காங்கிரஸ் உடன் கூட்டணி குறித்து பேசி வருகிறார்கள். அதிமுக இப்படி ஒருபோதும் தனது தன்மானத்தை இழக்காது. திமுக அரசு அகற்றப்பட வேண்டும். அதுதான் எங்களின் நிலைப்பாடு. மற்றவர்கள் எல்லாம் எங்களுக்கு எதிரிகள் இல்லை. 2026-ல் மக்களின் தயவில் திமுக அகற்றப்படும்" என்று கூறியிருக்கிறார்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks