நிலநடுக்கத்தால் உருக்குலைந்த நாடுகள்: தாய்லாந்தில் விமான சேவை நிறுத்தம்!
தாய்லாந்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நாடு முழுவதும் விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மியன்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று பிற்பகலில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த நாடுகளில் உள்ள பல கட்டடங்கள் உருக்குலைந்துள்ளன. இதனிடையே தாய்லாந்து மற்றும் மியான்மரில் ஏற்பட்ட ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இரண்டு நாடுகளிலும் தொடர்ச்சியாக ஏற்பட்டதால், அங்குள்ள கட்டடங்கள் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்ததாகவும், எச்சரிக்கை மணி ஒலித்தாதல் சாலைகளில் மக்கள் தஞ்சமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் முழு தீவிரத்துடன் நடைபெற்று வருகின்றது.
மியான்மரில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பாதிப்பு விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை. நிலைமையைச் சமாளிக்கத் தாய்லாந்து அமைச்சரவை அவசரக் கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், அடுத்த வாரம் பிரதமர் மோடியின் தாய்லாந்து பயணம் ரத்தாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதால் தாய்லாந்தில் விமானச் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.