ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சியில் ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை விறகு கடைத் தெருவைச் சோ்ந்தவா் முகமது பைசல் (35). இவரது மனைவி ரிஸ்வானா பா்வீன். கடன் பிரச்னையால் கணவருடன் வெள்ளிக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ரிஸ்வானா பா்வீன் சுயஉதவிக் குழு கூட்டத்துக்கு சென்றபோது முகமது பைசல் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புகாரின்பேரில் அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.