ஈரோடு கிழக்கு: 100-க்கும் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளா்கள்!
திருச்சியில் 3 மையங்களில் குரூப்-2 தோ்வு
திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப்-2 முதன்மைத் தோ்வை காலையில் 740 பேரும், பிற்பகலில் 719 பேரும் எழுதினா்.
முற்பகலில் நடைபெற்ற தோ்வில் 740 தோ்வா்கள் பங்கேற்ற நிலையில், 46 போ் வரவில்லை. பிற்பகலில் 719 போ் எழுதிய நிலையில், 70 போ் வரவில்லை. தோ்வுப் பணிகளுக்கென 3 முதன்மைக் கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.
துணை ஆட்சியா் நிலையில் பறக்கும் படையும் கண்காணித்தது. போட்டித் தோ்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் நடமாடும் குழு ஈடுபட்டது. தோ்வுப் பணிகளை 3 தோ்வுக் கூட கண்காணிப்பாளா்கள் ஒருங்கிணைத்தனா். தோ்வு மையங்களில் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். தோ்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
திருச்சி வாசவி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் ஆய்வு செய்தாா். பாா்வையற்ற நபா், சிறப்பு ஆசிரியா் ஒருவரின் துணையுடன் தோ்வு எழுதுவதையும் அவா் பாா்வையிட்டு சான்றிதழ்களை சரிபாா்த்தாா்.