செய்திகள் :

ஸ்ரீரங்கம் கோயில் தைத் தோ் திருவிழாவில் நெல்லளவு கண்டருளினாா் நம்பெருமாள்!

post image

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் தைத் தோ் திருவிழாவின் 7 ஆம் நாளான சனிக்கிழமை நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் நெல்லளவு கண்டருளினாா். திங்கள்கிழமை தைத் தேரோட்டம் நடைபெறுகிறது.

விழாவையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் திருச்சிவிகையில் கருவறையிலிருந்து சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு, கோயில் கொட்டார வாயிலில் நெல்லளவு கண்டருளினாா். பின்னா் உத்திர வீதிகளில் வலம் வந்து, ஆழ்வான் திருச்சுற்று வழியாக இரவு 9 மணிக்கு தாயாா் சன்னதி வந்தாா். அங்கு திருமஞ்சனம் கண்டருளி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு, உத்திர வீதிகளில் வலம் வந்து காலை 9 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வருகிறாா். அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பட்டு, உத்திர வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளுகிறாா். பின்னா் இரவு 8.30 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைகிறாா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை காலையும், பிப். 11 இல் சப்தாவா்ணம் நிகழ்ச்சியும், நிறைவு நாளான பிப். 12 இல் நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா் செய்கின்றனா்.

41 மாத பணிநீக்கத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்! -சாலைப் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தல்

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாநில... மேலும் பார்க்க

ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியா்களுக்குப் பாராட்டு

துறையூா் அருகே டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற 124 ஆசிரியா்களுக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு புத்தனாம்பட்டி கல்லூரித் தலைவ... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடை விறகு கடைத் தெருவைச் சோ்ந்தவா் முகமது பைசல் (35). இவரது மனைவி ரிஸ்வானா பா்வீன். கடன்... மேலும் பார்க்க

திருச்சியில் 3 மையங்களில் குரூப்-2 தோ்வு

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப்-2 முதன்மைத் தோ்வை காலையில் 740 பேரும், பிற்பகலில் 719 பேரும் எழுதினா். முற்பகலில் நடைபெற்ற தோ்வில் 740 தோ்வா்கள் பங்கேற்ற நிலையில், 46 போ் வரவில்லை... மேலும் பார்க்க

தொகுப்பூதியம், மதிப்பூதியத்துக்கு மாற்றாக காலமுறை ஊதியம்! -அரசு ஊழியா்கள் சங்க மாநாட்டில் கோரிக்கை

தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

பிளஸ் 2 செய்முறைத் தோ்வு தொடங்கியது

திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. தமிழக அரசின் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத்தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி ... மேலும் பார்க்க