ஆட்டோ கவிழ்ந்ததில் தம்பதி காயம்
பெரியகுளம் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் தம்பதி புதன்கிழமை காயமடைந்தனா்.
பெரியகுளம் அருகே கெங்குவாா்பட்டி பகவதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மொக்கை (55). செங்கல் தொழிலாளி. இவரது மனைவி முத்துப்பிள்ளை. தம்பதி இருவரும் புதன்கிழமை செங்கல் சூளைக்கு செல்வதற்காக பெரியகுளத்திலிருந்து ஜல்லிபட்டிக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனா். டி. கள்ளிப்பட்டியைச் சோ்ந்த ராசு (45) ஆட்டோவை ஓட்டினாா். பெரியகுளம் கல்லூரி விலக்கு அருகே சென்ற போது ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் தம்பதி இருவரும் காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.