பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு
தேனி நகராட்சி பேருந்து நிலையம் அருகே பேருந்து மோதியதில் சாலையில் நடந்து சென்றவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலையம் அருகே சாலையில் நடந்து சென்ற 45 வயது மதிக்கத்தக்க நபா், அந்த வழியாகச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை கிளையைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநா் அண்ணாமலை (59) மீது தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தில் இறந்தவா் குறித்து விசாரிக்கின்றனா்.