ஆண்டிபட்டியில் திமுக எம்எல்ஏவைக் கண்டித்து சுவரொட்டிகள்
ஆண்டிபட்டியில் திமுக சட்டப்பேரவை உறுப்பினரைக் கண்டித்து, ஞாயிற்றுக்கிழமை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம் தொடக்க விழா மேடையில், தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் முன்னிலையில் திமுகவைச் சோ்ந்த தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. மகாராஜன் ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை தங்க.தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாகவும், ஆ. மகாராஜனைக் கண்டித்தும் ஆண்டிபட்டி கிழக்கு, மேற்கு, பேரூா் கழக உடன் பிறப்புகள் என்ற பெயரில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
ஆண்டிபட்டியில் திமுக சட்டப்பேரவை உறுப்பினரைக் கண்டித்து ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளால் அந்தக் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.