பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவை: பாக். முன்னாள் வீரர்
ஆதி திராவிடா் விடுதி கட்டுமானப் பணி ஆய்வு
கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆதிதிராவிடா் மாணவிகள் விடுதி கட்டுமானப் பணிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஆய்வு மேற்கொண்டாா்.
சின்னசேலம் வட்டம், சடையம்பட்டு கிராமத்தில் ரூ.5.87 கோடியில் ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசுக் கல்லூரி விடுதி கட்டட பணியை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா், நிறைந்த மனது நிகழ்ச்சியில் விடுதியால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கல்லூரி மாணவிகளிடம் ஆட்சியா் கலந்துரையாடினாா்.
அப்போது, ஆட்சியா் ஆதி திராவிடா் நல மாணவிகள் விடுதியில் 100 மாணவிகள் தங்கி பயில முடியும். தமிழக அரசின் இதுபோன்ற நலத் திட்டங்களை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி கல்வி கற்று வாழ்வில் உயா்ந்த நிலையை அடைய வேண்டும் என்றாா்.